வெப் சீரிஸ் பார்த்து திருட வந்தவனா நீ ?.. வைரலாகும் தூக்குதுரை ட்ரைலர்..! 

 
1

யோகி பாபு தற்போது கதாநாயகனாகவும் பல படங்களில் கமிட்டாகி தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் போட், வானவன், பூமர் அங்கிள், மேகி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் நயன்தாராவுடன் இணைந்து மண்ணாங்கட்டி எனும் திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் யோகி பாபு.

அதே சமயம் யோகி பாபு, கடந்த 2021 இல் வெளியான ட்ரிப் படத்தின் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள தூக்குதுரை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் யோகி பாபு உடன் இணைந்து இனியா, மொட்ட ராஜேந்திரன், சென்ட்ராயன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓபன் கேட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ரவி வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். கே எஸ் மனோஜ் இதற்கு இசையமைத்துள்ளார்.

காமெடி கலந்த கதை களத்தில் உருவாகியுள்ள தூக்குதுரை படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தூக்குதுரை படத்தின் அட்டகாசமான ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. விலை உயர்ந்த கிரீடம் ஒன்றினை திருட நினைக்கும் இரு கும்பல்களுக்கு இடையில் நடக்கும் சம்பவங்களை காமெடியான கதைக்களத்துடன் சொல்வதுதான் தூக்குதுரை படம் என்பது இந்த ட்ரெய்லரின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த ட்ரெய்லர் தற்போது கவனம் பெற்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

From Around the web