நீ சரியான லூசு டா? செஃப் தாமுவை அசிங்கப்படுத்திய ராஜா மந்திரி பட நடிகை..!

ராஜா மந்திரி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஷாலினி ஜோயா. இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானார்.இவர் கண்ணகி படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது.
இதைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று கலக்கி வருகின்றார். இவர் தமிழும் மலையாளம் சேர்ந்து கதைக்கும் அழகு பலராலும் ரசிக்கப் பட்டு வருகின்றது.
இந்த நிலையில், இறுதியாக இடம்பெற்ற எபிசோட்டில், செஃப் தாமுவை மீண்டும் மரியாதை குறைவாக பேசி உள்ளார் ஷாலினி ஜோயா. தற்போது இந்த வீடியோக்கள் மிகவும் வைரலாகி வருகின்றன.
அதாவது ஷாலினி ஜோயாவின் இடத்திற்கு வந்த செஃப் தாமு, அவர் மாவை கையில் எடுக்க, நீ சரியான லூசு டா? ஏய்..ஏய்..ஏய்..அப்படி என்று கேட்டு விடுகின்றார். மேலும் தான் கடிப்பேன் என்று தனது செல்ல தமிழில் சொல்கின்றார்.