மகேஷ் பாபுவுடன் மோதும் அர்ஜுன்- இது வேறலெவல் அப்டேட்..! 
 

 
மகேஷ் பாபு

பரசுராம் பெட்லா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தில் வில்லனாக ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டார் நடிகரான மகேஷ் பாபு அடுத்ததாக நடிக்கும் படம் ‘சர்காரு வாரி பாட்டா’. கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் மீண்டும் ஷூட்டிங் பணிகள் துவங்கவுள்ளன.

இந்த படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு துபாயில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மீண்டும் துபாயில் இருந்தே இந்த படத்திற்கான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்காரு வாரி பாட்டா படத்தில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடிக்கப்போவது யார் என்கிற கேள்வி பரவலாக இருந்து வந்தது. இந்நிலையில் தென்னிந்திய சினிமா பலவற்றில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் அர்ஜுன் இந்த படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் கதை அர்ஜுனுக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும், அதனால் சர்காரு வாரி பாட்டா படத்தில் அவர் வில்லனாக நடிக்க சம்மதித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

From Around the web