விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு வில்லன் இவரா..??
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தில், அவருக்கு வில்லனாக நடிக்கவுள்ள நடிகர் குறித்த விபரங்கள் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Jun 7, 2023, 13:05 IST
துணிவு படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேறியதை அடுத்து, அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு கிடைத்தது.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கான முதற்கட்ட தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அத்துடன் படத்தின் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி விரைவாக நடந்து வருகிறது.

அதன்படி விடாமுயற்சி படத்தில் வில்லனாக நடிப்பதற்கு அர்ஜுன் தாஸை படக்குழு தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. அதேபோன்று கதாநாயகியாக த்ரிஷா நடிக்கவுள்ளாராம். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 - cini express.jpg)