தென் ஆஃப்ரிக்காவில் தயாராகும் புதிய ரியாலிட்டி நிகழ்ச்சி- தொகுப்பாளராகும் அர்ஜுன்..!
 

 
நடிகர் அர்ஜுன்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிரமாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக ஆயத்தமாகி வருகிறார் நடிகர் அர்ஜுன்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கியதுடன், சினிமா நடிகர்கள் டிவி-யில் களமிறங்குவதற்கான பார்வை முற்றிலும் மாறியது. அவரை தொடர்ந்து விஜய் சேதுபதி, விஷால், வரலக்ஷ்மி, தமன்னா என பலரும் டிவியில் தொகுப்பாளர்களாக களமிறங்க தொடங்கினர்.

விரைவில் பிக்பாஸ் சீசன் 5 துவங்கப்படவுள்ளது. இதையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சியால் இழக்க நேரிடும் டி.ஆர்.பி ரேட்டிங்கை சரிகட்ட பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் புதிய நிகழ்ச்சிகளை தயாரிக்கும் பணிகளை துவங்கியுள்ளன.

அதன்படி சன் டிவி ‘மாஸ்டர் செஃப் தமிழ்’ என்கிற சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியை ஒளிப்பரப்பு செய்யவுள்ளது. இதை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறது. இதனுடைய தெலுங்கு நிகழ்ச்சியை நடிகை தமன்னா தொகுத்து வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் டிவியில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறார் நடிகர் அர்ஜுன். ஜி தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிப்பரப்பாகவுள்ள ‘சர்வைவர்’ என்கிற நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்குகிறார். முன்னதாக இந்நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்குவார் என்று கூறப்பட்டது.

ஆனால் அவரால் முடியவில்லை. இந்த நிகழ்ச்சி முழுமையாக தென் ஆஃப்ரிக்காவில் படமாக்கப்படவுள்ளது. அங்கு செப்டம்பரில் துவங்கப்படும் படப்பிடிப்பு 7 முதல் 8 மாதங்கள் வரை நடைபெறவுள்ளது. தொகுப்பாளர் அர்ஜுன் உட்பட போட்டியாளர்கள் தென் ஆஃப்ரிக்காவில் தங்கி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திரும்பவுள்ளனர். 

From Around the web