அர்ஜுன் மகளுக்கும், தம்பி ராமைய்யா மகனுக்கும் முடிந்தது நிச்சயதார்த்தம்..!

 
1

நடிகர் அர்ஜுனுக்கு மொத்தம் இரண்டு மகள்கள். அவர்களில் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் விஷால் நடித்த பட்டத்து யானை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு கன்னடத்தி பிரேம பரஹா, தமிழில் சொல்லிவிடவா ஆகிய படங்களில் நடித்தார். தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

சூழல் இப்படி இருக்க கோலிவுட்டில் சிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்தார் ஐஸ்வர்யா. இவர்களது காதலுக்கு இரண்டு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டினர். அர்ஜுன் மகளும், தம்பி ராமையாவின் மகனும் காதலிக்கும் விஷயம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையே தந்தது. ஏனெனில் இரண்டு பேரும் இணைந்து ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை.

1

இந்நிலையில் இரண்டு பேரின் காதலுக்கும் க்ரீன் சிக்னல் விழுந்ததை அடுத்து நிச்சயதார்த்தம் நேற்று  நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் ஐஸ்வர்யா – உமாபதி நிச்சயதார்த்தம் சிம்ப்பிளாக நடந்து முடிந்தது. திருமணம் விரைவில் நடக்கவுள்ளது. இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்துவருகின்றனர். தம்பி ராமையாவின் மகன் உமாபதி அதாகப்பட்டது மகா ஜனங்களே, மணியார் குடும்பம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web