ஹாலிவுட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு கொடுத்த நடிகர் அர்னால்டு... ரசிகர்கள் கண்ணீர்..!!
1984-ம் ஆண்டு வெளியான ‘தி டெர்மினேட்டர்’ படம் தான் அர்னால்டை உலகளவில் பிரபலப்படுத்தியது. அதற்கு பிறகு தான் அவர் உலகம் போற்றும் நடிகராக மாறினார்.
அதை தொடர்ந்து 1991-ம் ஆண்டு வந்த டெர்மினேட்டர் 2: தி ஜட்ஜ்மெண்ட் டே திரைப்படம், ஹாலிவுட்டை கடந்து உலகளவில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இது அர்னால்டின் திரைவாழ்க்கையின் மகுடமாகவே அமைந்தது. அவருக்கான வெளியை மேலும் அதிகரிக்கச் செய்தது.
இந்நிலையில் 2003-ம் ஆண்டு டெர்மினேட்டர் 2 ரைஸ் ஆஃப் தி மெஷின்ஸ் திரைப்படம் வெளியானது. இதுவும் மரண ஹிட்டடித்தது என்றாலும், முந்தைய பாகங்கள் அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. அதை தொடர்ந்து வந்த டெரிமினேட்டர் படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்தன.
இதனால் இனிமேல் டெர்மினேட்டர் வரிசைப் படங்களில் நடிக்கப்போவதில்லை என்று அர்னால்டு ஸ்வாஸ்நேக்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அந்த படங்கள் சரியாக ஓடாமல் போனதற்கு இயக்குநர்கள் உருப்படியாக பணியாற்றவில்லை என்பது தான் காரணம். அதனால் தான் இந்த முடிவு எடுத்துள்ளேன் என்று அர்னால்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக டெர்மினினேட்டர் வரிசைப் படங்களில் சாரா கார்னர் என்கிற கதாபாத்திரம் தான் ஹீரோ/ஹீரோயின். இதுவும் மெஷின்களை விடவும் பெரியளவில் வரவேற்பு பெற்றது. அவர் ஏற்கனவே டெர்மினேட்டர் வரிசைப் படங்களில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.