”என்னையும் கைது செய்திடுக அரசே” துணிந்து ட்வீட் போட்ட ஓவியா...!

 
”என்னையும் கைது செய்திடுக அரசே” துணிந்து ட்வீட் போட்ட ஓவியா...!

டெல்லியில் மத்திய அரசை எதிராக போஸ்டர் ஓட்டிய 17 பேரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் பதிவிட்ட ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்து நடிகை ஓவியா ட்வீட் செய்துள்ளார்.

டெல்லியில் ”எங்கள் குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்தீர்கள்?” என பிரதமர் நரேந்திர மோடியை கேள்வி கேட்ட்கும் விதமாக பல்வேறு முக்கிய இடங்களில் போஸ்டர் ஓட்டப்பட்டு இருந்தன.


இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது அடுத்து, போஸ்டர் ஓட்டியதாக குற்றஞ்சாட்டி 17 பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. இதையடுத்து ‘என்னையும் கைது செய்யுங்கள்’ (#ArrestMetoo)  என்கிற ஹேஷ்டேகை பதிவிட்டு கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் ராகுல் காந்தி.

அதை தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஓட்டியவர்களை கைது செய்ததை கண்டித்து ”இது ஜனநாயகமா அல்லது ஜனநாயக அத்துமீறலா” என்கிற கேள்வியை எழுப்பியதுடன், ராகுல் காந்தி கருத்துக்கு ஆதரவு கூறி #ArrestMetoo என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகை ஓவியா. இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

From Around the web