வெப் சிரீஸுக்கு வரும் அருண் விஜய்..!

 
அருண் விஜய்
தமிழ் ராக்கர்ஸ் இணையதள செயல்பாடுகளை மையமாக வைத்து உருவாகும் வெப் சிரீஸில் நடிகர் அருண் விஜய் நடிக்கவுள்ளார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் கதாநாயகனாக நடித்த படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்திருப்பார். அந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து அறிவழகன் இயக்கத்தில் ‘குற்றம் 23’ படத்தில் அவர் நடித்தார்.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் அறிவழகனுடன் இணைந்துள்ளார் அருண் விஜய். இம்முறை அவர்களுடைய கூட்டணியில் ஒரு வெப் சிரீஸ் தயாராகவுள்ளது. இது இணையத்தில் முறைகேடாக படங்கள் வெளியாவதை மையப்படுத்தி உருவாக்கப்படுகிறது.
 

From Around the web