அருண் விஜய் மிரட்டும் மிஷன் சேப்டர் 1 பட டீசர் வெளியீடு..!!

கங்கனா ரனாவத் நடிப்பில் 2021-ம் ஆண்டு வெளியான ‘தலைவி’ படத்தை தொடர்ந்து ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மிஷன்: சேப்டர் 1 - அச்சம் என்பது இல்லையே’. இந்த படத்தில் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. இந்த படம் தமிழில் நேரடியாகவும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டும் வெளிவருகிறது.
அதிரடி கலந்த செண்டிமண்ட் படமாக தயாராகியுள்ள ‘மிஷன்: சேப்டர் 1 - அச்சம் என்பது இல்லையே’ டீசர் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் ரிலீஸ் செய்கிறது.
இந்த படம் கோடைக்கால விடுமுறையை குறிவைத்து திரைக்கு வரலாம் என சொல்லப்படுகிறது. எனினும், இதுவரை படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பு நிறுவனம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.