காதல் சொன்ன அருண்! YES கூறிய அர்ச்சனா!

 
1
பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பத்தில் இருந்தே ஒரு சலசலப்புடனே ஓடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவாக போட்டியாளர்களிடத்தில் ஒற்றுமை இருப்பதில்லை. வேஸ்ட் சீசன் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சீசனில் கண்ணம்மா சீரியல் நடிகர் அருண் போட்டியாளராக பங்கு பற்றியுள்ளார். 

முன்னைய பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னரான அர்ச்சனாவும், நடிகர் அருணும் காதலித்து வருவதாக சோஷியல் மீடியாவில் பேசப்பட்டு வந்தது. இதுகுறித்து இருவரும் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார்கள். விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் அர்ச்சனா பிறந்தநாளுக்கு அருண் வாழ்த்து தெரிவித்து இருப்பார்.  

அந்த வாழ்த்திலே அர்ச்சனா இம்ப்ரெஸ் ஆகிவிட்டார். அதற்கு அவரும் அழகாக பதில் தந்திருப்பார். அதுமட்டுமின்றி, அருண் அமைதியாக இருந்தபோது, அவரை எல்லோரும் கிண்டல்  செய்வதை பார்த்த  அர்ச்சனா கொஞ்சம் பொங்கி எழுந்து பேசி இருப்பார். இவர்கள் செய்வதை எல்லாம் பார்த்த ரசிகர்கள் இவர்களின் கியூட் லவ் பார்த்து  அருண் வெளியே வந்ததும் திருமணம் தான் போல என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

From Around the web