ஆர்யா படத்தின் மூலம் மலையாளத்தில் ரீ-என்டரி கொடுக்கும் அரவிந்த் சாமி..!

 
ஆர்யா படத்தின் மூலம் மலையாளத்தில் ரீ-என்டரி கொடுக்கும் அரவிந்த் சாமி..!

மீண்டும் தமிழ் சினிமாவில் பரபரப்பாக நடிக்க தொடங்கியுள்ள நடிகர் அரவிந்த் சாமி, மலையாளம் மற்றும் தமிழில் ஒரேநேரத்தில் தயாராகும் ஆர்யாவின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் 25 ஆண்டுகளுக்கு பிறகு அவர் மலையாளத்தில் நடிக்கிறார்.

தமிழில் அரவிந்த் சாமி நடிப்பில் தயாராகியுள்ள ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’ போன்ற படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. ’கள்ளபார்ட்’ மற்றும் ’தலைவி’ படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார்.

இதுதவிர நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘நவரஸா’ என்கிற ஆந்தாலஜி படத்தில் ஒரு கதையை இயக்கி நடித்து வருகிறார். தற்போது இந்த படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

இதற்கிடையில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஒன்றாக உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் அரவிந்த் சாமி. தமிழில் ’ரெண்டகம்’ மற்றும் ‘ஒட்டு’ என்கிற பெயரில் இந்த படம் தயாராகி வருகிறது. இந்த படம் மூலம் மலையாளத்தில் முன்னணி ஹீரோவாகவுள்ள குஞ்சகோ போபன் தமிழில் அறிமுகமாகிறார்.

வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள இந்த படத்தை நடிகர் ஆர்யா தயாரித்து வருகிறார். மலையாளத்திலும் தமிழிலும் ஒரே நேரத்தில் இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த படத்தின் முதல்பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

From Around the web