மீண்டும் சித்தார்த் அபிமன்யுவாக நடிக்கும் அரவிந்த் சாமி..!

 
1

நாகர்ஜுனா - அமலா தம்பதிகளின் மகன் அகில் கதாநாயகனாக நடிக்கும் தெலுங்குப் படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் அரவிந்த் சாமி. தற்போது சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர், ஸ்டார் நடிகர்கள் படங்களில் வில்லனாக நடித்து வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்.

ஜெயம் ரவி நடிப்பில் அவருடைய அண்ணன் எம். ராஜா இயக்கத்தில் வெளியான படம் ‘தனி ஒருவன்’. இதில் மிரட்டல் வில்லனாக நடித்து பாராட்டுக்களை அள்ளினார். மேலும், போகன், செக்கச் சிவந்த வானம் போன்ற படங்களிலும் வில்லனாக நடித்து கவனத்தை ஈர்த்தார்.

எனினும் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் அவர் ஹீரோவாக நடிப்பதையும் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கில் அகில் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கிறார் அரவிந்த் சாமி. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளது. 
 

From Around the web