அர்விந்த் சுவாமி அணிந்திருக்கும் செருப்புதான் விஜய்யின் ஃபேவரிட்…!

 
1

 ‘மெய்யழகன்' படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. ஃபீல் குட் நாஸ்டால்ஜியா படமான இதில் பழைய சைக்கிள், ஜல்லிக்கட்டு காளை, யானை எனப் பல நினைவுகளைத்தூண்டும் விஷயங்கள் இடம்பெறுகின்றன. 

இந்த படத்தில் அர்விந்த் சுவாமி அணிந்திருக்கும் செருப்புக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. ‘’என்ன அத்தான் செருப்பு புசு புசுன்னு இருக்கு’’ என அர்விந்த் சுவாமியின் செருப்பை எடுத்து அணிந்துகொள்வார் கார்த்தி. 

அர்விந்த் சுவாமி, கார்த்தி

சைக்கிள் பயணத்தில் அர்விந்த் சுவாமியின் செருப்பை கார்த்தியும், கார்த்தியின் செருப்பை அர்விந்த் சுவாமியும் அணிந்து பயணிப்பார்கள். படத்தில் அர்விந்த் சுவாமி அணிந்திருக்கும் செருப்பின் பிராண்ட் ‘Birkenstock. ஜெர்மனியைச் சேர்ந்த பிராண்டான இந்த செருப்புக்கு சென்னை ஃபீனிக்ஸ் மாலில் மட்டும்தான் ஷோரூம் இருக்கிறது. 

அரவிந்த் சுவாமி அணிந்திருக்கும் செருப்பின் ஆரம்பவிலை 9,490 ரூபாய் மட்டுமே. கஸ்டமைசேஷனுக்கு ஏற்றபடி இந்த செருப்பின் விலை 24,000 ரூபாய் வரை போகிறது.

விஜய்

இந்த Birkenstock செருப்புதான் நடிகர் விஜய்யின் ஃபேவரிட்டும். வீடு, பனையூரில் உள்ள அலுவலகத்தில் எல்லாம் இந்த செருப்பு அணிந்தபடிதான் இருப்பார் விஜய். கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் இந்த செருப்பு அணிந்தபடிதான் இப்போதெல்லாம் வருகிறார்.

From Around the web