ராவணனாக நடித்து புகழ்பெற்ற அரவிந்த் திரிவேதி காலமானார்..!

 
அரவிந்த் திரிவேதி

ராமாயண தொடரில் ராவணனாக நடித்து பிரபலமான அரவிந்த் திரிவேதி வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருடைய மறைவுக்கு பாலிவுட் திரையுலகத்தினர் பலர் இரங்கல் கூறி வருகின்றனர்.

1990-களின் மத்தியில் ஒளிபரப்பாக துவங்கிய ராமாயண இதிகாச தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ராமானந்த் சாகர் இயக்கத்தில் உருவான இந்த தொடரில் ராவணனாக நடித்தவர் அரவிந்த் திரிவேதி. 

நீண்ட காலமாக உடல்நலக்குறைவாக அவதிப்பட்ட இவர் நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82. இவர் 300-க்கும் மேற்பட்ட இந்தி மற்றும் குஜராத்தி படங்களில் நடித்துள்ளார்

கடந்த 1991-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் பாராளுமன்ற உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளார். மேலும் திரைப்ப்டாத் தணிக்கை குழு தலைவராகவும் அவர் பதவி வகித்துள்ளார். நடிகர் அரவிந்த் திரிவேதி மறைவுக்கு பாலிவுட் உலகத்தைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

From Around the web