அனல் பறக்கும் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் டீசர்..!!

’கொம்பன்’ முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ’காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் டிரெண்டிங் அடித்து வருகிறது.
 
 
katharbasha

2022-ம் ஆண்டு வெளியான விருமன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் படம் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம். இப்படத்தில் ஹீரோவாக ஆர்யா, கதாநாயகியாக சித்தி இதானி நடித்து வருகின்றனர்.

இந்த படத்துக்கான பூஜை கடந்த அக்டோப்பர் மாதம் நடைபெற்றது. இதையடுத்து படப்பிடிப்பு பணிகள் வேகமெடுத்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கான டீசர் இணையத்தில் வெளிவந்துள்ளது.

முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது. அதிரடி அம்சங்கள் நிறைந்த ஒரு டிராமா கதையாக இந்த படத்தை எதிர்பார்க்கலாம். மேலும் பஞ்ச் டயலாக்குகள், டிரெண்ட் அடிக்கும் பாடல்கள் என அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் உள்ளன. 

நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பாட்டா பரம்பரை படம் பெரியளவில் வரவேற்பை பெற்றது. ஆனால் அவருடைய நடிப்பில் அடுத்து வெளியான அரண்மனை 3, எனிமி மற்றும் கேப்டன் போன்ற படங்கள் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை.

இதனால் கட்டாயம் ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஆர்யா இருக்கிறார். அதனால் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படத்தின் மீது அவர் பெரிய நம்பிக்கை வைத்துள்ளார்.

From Around the web