ஆர்யாவின் ‘காதர் பாட்சா’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
kaathrabasha

விருமன் படத்துக்கு பிறகு முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காதர்பாட்சா’. இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் ஹீரோயினாக நடித்த சித்தி இதானி கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபு, பாக்யராஜ், சிங்கம்புலி, நரேன், தமிழ், மதுசூதன ராவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

இந்த படத்தில் பூஜை கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற நிலையில், ’காதர்பாட்சா’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தென்மாவட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது. படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் மற்றும் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.


காதர்பாட்சா படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், வரும் ஜூன் 2-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள ‘வீரன்’ திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web