ஆர்யன் கான் வெளிவர ஷூரிட்டி கொடுத்த முன்னாள் கதாநாயகி..!

 
ஜூஹி சாவ்லா மற்றும் ஷாரூக்கான்

நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் பிணையில் வெளிவருவதற்கு பிரபல நடிகை ஷூரிட்டி கொடுத்துள்ள விபரம் தெரியவந்துள்ளது.

பாலிவுட் சினிமாவின் உச்சபட்ச நடிகரான ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து 22 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஆர்யன் கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

இதற்காக ஷாரூக்கானின் தோழியும் முன்னாள் கதாநாயகியுமான ஜூஹி சாவ்லா பெரும் உதவி செய்துள்ள விபரம் தெரியவந்துள்ளது. பிணையில் ஆர்யன் கான் வெளிவருவதற்கு நீதிமன்றம் ரூ. 1 லட்சம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

அதற்கான வழக்கில் ஆஜரான நடிகை ஜூஹி சாவ்லா, ஆர்யன் கன பிணைத் தொகையை செலுத்துவதற்கு தான் பொறுப்பு என்று கூறி  உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு  ஏற்றுக் கொண்டுள்ளார் ஜூஹி சாவ்லா.
 

From Around the web