ஆர்யாவுக்கு மாமியாரான ஆண்ட்ரியா- அரண்மனை 3 டிரெய்லர்..!

 
அரண்மனை 3

அரண்மனை 3 படத்தின் டிரெய்லர் சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதை அடுத்து, ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் குறித்த பின்னணி தகவல்கள் தெரியவந்துள்ளன.

தமிழில் அரண்மனை- 1, அரண்மனை- 2 படங்களின் வரிசையில் சுந்தர். சி இயக்கியுள்ள புதிய படம் அரண்மனை- 3. ஒவ்வொரு பாகத்துக்கும் பேய் படம் என்பதை தாண்டி எந்தவிதமான சம்மந்தமும் கிடையாது. 

முந்தைய இரண்டு பாகங்களுக்கும் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து அரண்மனை 3 என்கிற பெயரில் மற்றொரு பேய் படத்தை சுந்தர். சி இயக்கியுள்ளார். 

ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். நேற்று இந்த படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. 

இந்த படமும் திகில் கதையமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பேயாக ஆண்ட்ரியா நடித்திருப்பது போல தெரிகிறது. இவர் அரண்மனை முதல் பாகத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

அதனால் முதல் பாகத்துக்கும் புதிய படத்துக்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்குமா என்பது தெரியவில்லை. கதாநாயகி ராஷி கண்ணாவுக்கு ஆண்ட்ரியா அம்மாவாக நடித்துள்ளார்.

அதன்படி பார்த்தால் ஆரியாவுக்கு அவர் மாமியாராகிறார். சார்பட்டா பரம்பரை படத்துக்கு பிறகு ஆர்யாவுக்கு வெளியாகும் படம் என்பதால், அரண்மனை 3 படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

From Around the web