விரைவில் ஓடிடியில் ரிலீஸாகும் ஆர்யாவின் புதிய வெப் தொடர்..!

 
1

இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள வெப்சீரிஸ் ‘தி வில்லேஜ்’. ஷமிக் தாஸ்குப்தாவின் கிராஃபிக்ஸ் நாவலை தழுவி இந்தத் தொடர் உருவாகியுள்ளது.தமிழின் முதல் கிராஃபிக்ஸ் நாவல் வெப்சீரிஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், முத்துகுமார், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தொடரை ஸ்டூடியோ சக்தி நிறுவனம் தயாரித்துள்ளது.

ஓர் இரவில் காணாமல் போன தனது குடும்பத்தை மீட்க போராடும் நாயகனின் கதையாக தொடர் உருவாகியுள்ளது. இந்நிலையில் தொடரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

15 விநாடிகள் மட்டுமே ஓடும் இந்த டீசரின் காட்சிகள் ஹாரர் பாணியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜாம்பி வகையறா காட்சிகள் தொடரின் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நவம்பர் 24-ம் தேதி வெளியாகிறது.

From Around the web