வழக்கம்போல இதை வெளியே சொல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டார். வழக்கம்போல ஊருக்கே சொல்லிவிட்டார்கள்..! 

 
1

 விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம் அஜித் ரசிகர்களுக்கு ஆக்‌ஷன் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், ஷூட்டிங் முடியும் முன்பே அஜித் வெரைட்டி வெரைட்டியாக ட்ரீட் கொடுத்து அசத்தி வருகிறார். அர்ஜுன், ஆரவ் ஆகியோரை நைட் டின்னர் பார்டிக்கு அழைத்துச் சென்ற அஜித், அவர்களுக்கு செம்ம ட்ரீட் வைத்த புகைப்படங்கள் வைரலாகின. அதன் பின்னர் தனது கேமராவால் ட்ரீட் கொடுத்திருந்தார். அதாவது அர்ஜுன், ரெஜினா ஆகியோரை செம்ம ஸ்டைலிஷாக போட்டோ எடுத்து ரசிகர்களை சிலிர்க்க வைத்தார்.

இதுவும் போதாது என திடீரென சிக்கன் கிரேவி சமைத்து விடாமுயற்சி படக்குழுவுக்கு விருந்து வைத்தார் அஜித். இந்த போட்டோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இதனையடுத்து அஜித் சிக்கன் கிரேவி செய்ததை ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்துள்ளார். அஜித் சிக்கன் கிரேவி செய்யும் போட்டோவை ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், “வழக்கம்போல இதை வெளியே சொல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டார். வழக்கம்போல ஊருக்கே சொல்லிவிட்டார்கள். வழக்கம்போல தொடரும்..” என பதிவிட்டுள்ளார்.

அதாவது பப்ளிசிட்டியை விரும்பாத அஜித், இதுபோன்ற சம்பவங்களை வெளியே தெரிய வேண்டாம் என சொல்வார். ஆனால் அது கடைசியாக எல்லோருக்கும் தெரிந்துவிடும், அவரைச் சேர்ந்தவர்களே இந்த சம்பவங்களை வைரலாக்கி விடுவார்கள் என ஊமை குத்தாக குத்தியுள்ளார் ப்ளூ சட்டை மாறன். முன்னதாக சென்னை மழை வெள்ளத்தில் அமீர்கான், விஷ்ணு விஷாலை மீட்க அஜித் உதவியது வைரலான போதும் ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்திருந்தார்.


 

From Around the web