அசோக் செல்வனுக்கு திருமணம்- மணப்பெண் யார் தெரியுமா..??
கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘சூது கவ்வும்’ படத்தில் அறிமுகமானவர் அசோக் செல்வன். அதை தொடர்ந்து பீட்சா 2, தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன், ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தார்.
மேலும் இவர் நடிப்பில் வெளியான ‘சில சமயங்களில்’ படம் பல்வேறு சர்வதேச விழாவில் கலந்துகொண்டு விருதுகளை குவித்தது. தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் அசோக் செல்வன் நடித்துள்ளார். ‘டைம் என்ன பாஸ்’, ‘நவரஸா’ போன்ற வெப் சிரீஸ்களிலும் நடித்துள்ளார்.
கடந்தாண்டு மட்டும் இவர் நடிப்பில் சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, வேழம் உட்பட 7 படங்கள் வெளியாகின. தற்போது பா. ரஞ்சித் தயாரிக்கும் ஒரு படம், நெஞ்சமெல்லாம் காதல் ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் அசோக் செல்வனுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே அவர், பிரபல தயாரிப்பாளரின் மகளும் நடிகையுமான ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை தான் அசோக் செல்வன் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அந்த பெண் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
விரைவில் அதுகுறித்து நடிகர் அசோக் செல்வன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி வெளியானதில் இருந்து சமூகவலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. மேலும் நடிகர் அசோக் செல்வன், நடிகர் அஜித்தின் தந்தை வழியில் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.