மூன்று நாயகிகளுடன் ரோமேன்ஸ் செய்யும் அசோக் செல்வன்..!

 
அசோக் செல்வன்

ஆர். ஏ. கார்த்திக் இயக்கும் படத்தில் நடிகர் அசோக் செல்வன் உடன் மூன்று முன்னணி கதாநாயிகள் இணைந்து நடிக்கவுள்ள விபரம் தெரியவந்துள்ளது.

தமிழில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கிய ஹீரோவாக உயர்ந்தவர் அசோக் செல்வன். அவருடைய அடுத்த படத்தில் மூன்று முன்னணி கதாநாயகிகள் இணைந்து நடிக்கவுள்ளனர். இதுதொடர்பான தகவலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த படத்தை ஆர்.ஏ. கார்த்திக் என்பவர் இயக்கவுள்ளார். இப்படத்தில் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். இவர்கள் மூவரில் யார் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்பது தெரியவில்லை. 

இந்த படத்திற்கான ஒளிப்பதிவு பணிகளை ஜியார்ஜ் சி வில்லம்ஸ் மேற்கொள்கிறார். இசையமைப்பாளராக கோபி சுந்தர் மற்றும் படத்தொகுப்பு பணிகள் ஆண்டனி மேற்கொள்ளவுள்ளனர். தேசியளவில் பல்வேறு மொழிப் படங்களை தயாரித்து வரும் வியாகம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இதற்கிடையில் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி வந்த ஹாஸ்டல் படத்தின் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இந்த படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது. 

From Around the web