அசோக் செல்வனின் சபா நாயகன் ட்ரைலர் வெளியானது..!

 
1

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் இளம் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அசோக் செல்வன்.நல்ல கதைகள் தேர்ந்தெடுத்து நடிப்பதில் கைதேர்ந்த ஹீரோவாக விளங்கும் இவர் தற்போது அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் நடித்துள்ளார் . சபா நாயகன் என்று பெயரிடப்பட்ட இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய கார்த்திக் அசோக் செல்வனுடன் கைகோர்த்து இயக்குனராக களமிறங்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.

அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து வரும் அசோக் செல்வன் தற்போது மீண்டும் முழு முழுக்க காதல் கதைக்களத்தில் நடித்துள்ள இப்படத்தை கிளீயர் வாட்டர் பிலிம்ஸ், ஐ சினிமா மற்றும் கேப்டன் மெகா என்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி தற்போது வைரல் ஆகி வருகிறது . கல்லூரி மாணவனாக முழு முழுக்க காதல் நயத்துடன் ரொமான்டிக் நாயகனாக இருக்கும் இந்த ட்ரைலரை நீங்களும் பாருங்கள்.

From Around the web