60 வயதில் இரண்டாவது திருமணம் செய்த விஜய்யின் ‘ரீல்’ அப்பா..!!

தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து புகழ்பெற்ற ஆஷிஷ் வித்யார்த்தி தனது 60 வயதில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
 
asish vidhyarthi

தூள், கில்லி, குருவி, உத்தமபுத்திரன், அனேகன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஆஷிஷ் வித்யார்த்தி. மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த இவர், கில்லி படத்தில் நடித்த பிறகு, நடிகர் விஜய்யின் ரீல் அப்பா என்கிற அடையாளத்துடன் வலம் வந்தார்.

தற்போது இவர் தமிழ்ப் படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டார். தெலுங்கில் தயாராகும் படங்கள், இந்தியில் உருவாகும் வெப் சிரீஸ்களில் நடிக்கவே ஆர்வங்காட்டி வருகிறார். இந்நிலையில் இவர் தனது 60 வயதில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

அவர் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் பெயர் ரூபாலி பருவா, அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். யூ ட்யூப் வீடியோவுக்காக ஆஷித் அசாம் சென்றிருந்த போது, இருவருக்குமிடையில் பழக்கமாகியுள்ளது. அது காதலாக மாறியதை அடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

asish vidhyarthi

ஆஷிஷ் வித்யார்த்தி ஏற்கனவே ராஜோஷி பவுரா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

From Around the web