கோடிகோடியாக சம்பளம் வாங்கும் நடிகர்களிடம் நீங்களே இந்த கேள்வியை கேளுங்கள் - நடிகர் செந்தில்..!

 
1

தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் நாசர் தலைமை தாங்கினார். எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்து பொருளாளர் கார்த்தியும், சங்கத்தின் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்து பொதுச்செயலாளர் விஷாலும் உரையாற்றினார்கள்.

இந்த கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நாசர், விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிமுடிக்க நிதி திரட்ட திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தனர். இதற்காக நட்சத்திர கலைவிழாக்கள் நடத்த இருப்பதாகவும் கூறினர். நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமான நாசர் தலைமையில் நடந்த இந்த பொதுக்குழு கூட்டத்தில் விஷால், கார்த்தி, ஸ்ரீமன், கோவை சரளா உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் இறுதியில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. நேற்றைய பொதுக்குழுவுக்குப் பிறகு நடிகர் செந்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை கேட்டனர்.

அதில் நடிகர்களிடமே நடிகர் சங்க கட்டிடத்துக்கான நிதியை வசூல் செய்யலாமே என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஊடகங்களாகிய நீங்கள்தான் அதை சொல்லவேண்டும். கோடி கோடியாக சம்பளம் வாங்கும் நடிகர்களிடம் நீங்களே இந்த கேள்வியை கேளுங்கள் என்று கூறினார்.

சில உறுப்பினர்கள் விஜயகாந்த் இருந்து இருந்தால் இந்த பணி இன்று முடிவடைந்து இருக்கும். அவர் இல்லாதது பெரிய இழப்பு என்று சொல்கிறார்கள்.உண்மையில் அவர் இருந்திருதால் கட்டி முடித்து இருப்பாரா? இதற்கு பதிலளித்த அவர் அது ஆண்டவன் செயல் என கேள்விக்கு உரிய பதில் அளிக்காமல் மறுத்துவிட்டார். ஒரே வருடத்தில் 64 பேர் இறந்து இருகாங்க? என்ற கேள்விக்கு “64 பேர் இல்லை கொரோனாவில் கோடிக்காணக்கான பேர் இறந்து இருக்காங்க.” நிறைய பேர் இறக்கிறார்கள் என்ற கேள்விக்கு “அதுக்கு நா என்ன பண்ண முடியும். நா என்ன டாக்டரா? நா எம்பிபிஎஸ் படிச்சிட்டு வந்து வேணா சொல்ற. இது இயற்கை.” என பதிலளித்துள்ளார்.

From Around the web