ஹீரோவாக களமிறங்கும் அஸ்வின்; காமெடி கதாபாத்திரத்தில் புகழ்..!

 
ஹீரோவாக களமிறங்கும் அஸ்வின்; காமெடி கதாபாத்திரத்தில் புகழ்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த அஸ்வின் குமார் ஹீரோவாக நடிக்கும் படத்தில் புகழ் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சிக்கு என மிகப்பெரிய ரசிகர் வட்டம் உண்டு. மேலும் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக பங்கேற்ற புகழ், பாலா, சுனிதா, தங்கதுரை, சரத் போன்றோருக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் உண்டு.

குறிப்பாக ஷிவாங்கி மற்றும் புகழ் இருவரும் பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் போட்டியாளர் அஸ்வின் நாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

கடந்த ஏப்ரல் 14-ம் தேதி ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் என்கிற நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அஸ்வின் நாயகனாக நடிக்கும் அறிவிப்பு வெளியானது. இப்படத்தை ஹரிஹரன் என்பவர் இயக்குகிறார். இது முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக உருவாகிறது.

இந்த படத்தில் ஹீரோ அஸ்வினுடன் புகழும் நடிக்கிறார். ஏற்கனவே தமிழ் சினிமாவில் புகழ் மொத்தம் 7 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவருடைய நெருங்கிய நண்பராக இருக்கும் அஸ்வினுடன் புகழ் இணைந்து நடிப்பது குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

From Around the web