அஸ்வின், புகழ் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு..!

 
அஸ்வின் லக்‌ஷ்மிகாந்தன்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அஸ்வின் மற்றும் புகழ் இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோவின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று மக்களை கவர்ந்தவர் அஸ்வின் லக்ஷ்மிகாந்தன். அவருடன் இதே போட்டியில் பங்கேற்று பிரபலமானவர் புகழ்.

இந்நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் ஒரே படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இப்ப்டாத்தில் இரண்டு நாயகிகள் உள்ளனர். ஹரிஹரன் என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு விவேக் மெர்வின் என்பவர் இசையமைக்கிறார்.

தமிழக ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள இப்படத்துக்கு என்ன சொல்ல போகிறாய் என்று தலைப்பிட்டுள்ளனர். அவரும் ஜூலை 19-ம் தேதி சென்னையில் படப்பிடிப்பு துவங்குகிறது. இப்படம் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படுகிறது.

From Around the web