பிரபு சாலமன் இயக்கத்தில் நடிக்கும் அஸ்வின்..!

 
பிரபு சாலமன் மற்றும் அஸ்வின்

காடன் படத்தை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கவுள்ள புதிய படத்தில் தொலைக்காட்சி பிரபலம் அஸ்வின் கதாநாயகனாக நடிக்கவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

பிரபு சாலமன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ‘காடன்’ திரைப்படம் வெளியானது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த படம் இந்தியில் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது. ஆனால் இதற்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

எப்போதும் பெரிய நடிகர்களுடன் கைக்கோர்த்தாலும் பிரபு சாலமன் படங்கள் தோல்வி அடைவது வழக்கமாக உள்ளது. தொடரி, காடன் போன்ற படங்கள் அதற்கு உதாரணமாக உள்ளன. இதனால் மீண்டும் தன்னுடைய பாணிக்கே திரும்ப அவர் முயன்று வருகிறார். 

இதையடுத்து மீண்டும் ஒரு ஹிட் படத்தை வழங்கும் முனைப்பில் பிரபு சாலமன் இயக்கியுள்ளது. வலுவான திரைக்கதையுடன் கூடிய இந்த படத்தில் வளர்ந்து வரும் நடிகர்களை மட்டுமே நடிக்கவைக்க அவர் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

அதன்படி பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தில் ’குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் கதாநாயகனாக நடிக்கவுள்ளது தெரிய வந்துள்ளது.  இதற்காக ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. முன்னதாக பிரபு சாலமன் இயக்கத்தில் விரைவில் ‘கும்கி 2’ வெளியாகவுள்ளது.
 

From Around the web