கடைசில எனக்கும் விபூதி அடிச்சிடல்ல அமேசான்..!  புலம்பி தள்ளிய அனிதா சம்பத்..! 

 
1
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றி தற்போது நடிகையாக மக்கள் மத்தியில் வலம் வருகிறார் அனிதா சம்பத்.இவர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரது அட்டகாசங்கள் இன்று வரை வைரல் ஆகி வருகின்றன.

இந்த நிலையில், அனிதா சம்பத் அமேசன் நிறுவனத்தில் ஆர்டர் பண்ணிய சாமானுக்கு பதிலாக அழுக்கடைந்த மோசமான நிலையில் இருக்கும் புடவை ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. இந்த வீடியோவை வெளியிட்டு பார்ப்போருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார் அனிதா.

அதாவது இன்றைய அவசர உலகில் நமது காலடிக்கு உணவு வகைகள் முதல் பொருட்கள் வரை கொண்டு சேர்க்கப்படுகின்றது. இதனால் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வழக்கம் அதிகமாகி உள்ளன.

இவ்வாறான நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அனிதா, அதில் ஸ்டோரேஜ் பாக்ஸ் வாங்க வேண்டும் என்று நினைத்து அமேசானில் ஆர்டர் போட்டுள்ளார். அவருக்கு கடந்த ஜூன் 13ஆம் தேதி அந்தப் பொருள் டெலிவரி ஆகிவிட்டது.

ஆனாலும் அந்த நேரத்தில் அனிதா பிசியாக இருந்ததால் அந்த பொருளை பிரித்து பார்க்கவில்லை. தற்போது ஒரு சில கிழமைகள் கடந்து அந்த பாக்ஸை பிரித்து பார்த்த அனிதாவுக்கு அதிர்ச்சி கிடைத்துள்ளது.

அதாவது அந்த பாக்ஸில் துர்நாற்றத்தோடு ரேஷன் கடை புடவை விட மிக மோசமான அழுக்கடைந்த புடவை ஒன்று காணப்பட்டுள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாத அனிதா, அது குறித்த வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

மேலும் இதற்கு அமேசான் நிறுவனம் பதில் சொல்ல வேண்டும் என்றும் இதற்கு என்ன செய்யலாம் என ரசிகர்களிடமும் கருத்துக்களை கேட்டு உள்ளார் அனிதா சம்பத். தற்போது அவருடைய வீடியோ வைரலாகி உள்ளன.

From Around the web