அதர்வாவின் 'டிஎன்ஏ' ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு..!

 
1

ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் புதிய படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. திரையரங்குகளில் ரிலீசாகும் படங்கள் ஒரு மாத இடைவேளைக்கு பின் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுகின்றன. அந்த வகையில் அதர்வாவின் 'டிஎன்ஏ' ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. அதாவது, ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 'டிஎன்ஏ' படம் ஜுலை 19 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. கிரைம் திரில்லர் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. இந்த ஜானரில் பிற மொழியில் வெளியாகும் படங்களை கூட தமிழ் சினிமா ஆடியன்ஸ் விரும்பி பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் கிரைம் திரில்லர் பாணியில் வெளியாகி அமோகமான வரவேற்பினை பெற்றது 'டிஎன்ஏ'.

ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் நெல்சன் வெங்கடேஷன். இவரது ஒவ்வொரு படங்களும் வெவ்வேறு விதமான ஜானரில் வெளியாகி வரவேற்பினை பெற்றுள்ளன. இவரது இயக்கத்தில் கடந்த ஜுன் 20 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது DNA. இப்படத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், ரமேஷ் திலக், ரித்விகா, பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்திருந்தனர்.

இப்படத்தின் கதை என்னவென்றால் அதர்வா, நிமிஷா இருவருக்கும் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தயு தன்னுடையது இல்லை என நிமிஷா கூறுகிறது. இதனையடுத்து டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்க்கும் போது உண்மையிலே அவர்களது குழந்தை இல்லை என்பது தெரிய வருகிறது. அதன்பின்னர் அதர்வா, நிமிஷாவின் குழந்தை கடத்தப்பட்ட உண்மையும் வெளிவர, குழந்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் இறங்குகிறார் அதர்வா.

இதனையடுத்து நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து டிஎன்ஏ படத்தினை இயக்கியிருந்தார் நெல்சன் வெங்கடேஷன். மெடிக்கல் கிரைம் திரில்லர் ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்தது. அதர்வாவுக்கு நல்ல கம்பேக்காக அமைந்துள்ளதாகவும் படத்தை பார்த்தவர்கள் கூறினர். இந்நிலையில் திரையரங்குகளில் வரவேற்பினை பெற்ற டிஎன்ஏ படம் தற்போது ஓடிடியில் ரிலீசாக இருக்கிறது.

இதனால் ஓடிடியில் இப்படத்தை பார்ப்பதற்கு காத்திருப்பில் உள்ளனர் ரசிகர்கள். பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்த 'டிஎன்ஏ' பாக்ஸ் ஆபீஸிலும் கணிசமான வசூலை குவித்தது. டிஜிட்டல், சேட்டிலைட் உரிமமும் நல்ல லாபத்தை கொடுத்தது. கிரைம் திரில்லர் விரும்பிகளுக்கு இந்த வாரம் நல்ல ட்ரீட்டாக DNA ஓடிடி ரிலீஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனிடையில் 'இதயம் முரளி' என்ற படத்தில் அதர்வா நடித்துள்ளார். கயாடு லோகர், பிரீத்தி முகுந்தன் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும், பராசக்தி படத்திலும் முக்கியமான ரோலில் அதர்வா நடித்து இருக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'பராசக்தி' படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

From Around the web