மோஷன் வீடியோ வெளியிட்டு குழந்தை பிறந்ததை அறிவித்த அட்லி!! 

 
1

பிரபல இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் அட்லி. ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த இவர், ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘முகப்புத்தகம்’ என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார்.

அதன் பிறகு, தெறி, மெர்சல், பிகில் என பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணையும் படமான ‘ஜவான்’ அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

Atlee

இதனிடையே சீரியல் நடிகை கிருஷ்ணபிரியா என்பவரை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி அட்லி திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருமணமாகி சரியாக 8 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் தற்போது அட்லி தனது மனைவி ப்ரியா கர்ப்பமாக இருப்பதை சமூக வலைதளத்தில் அட்லி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 19-ம் தேதி சென்னையில் பிரியா அட்லியின் வளைகாப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் இருவரின் குடும்பத்தினர், திரையுலகினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.


 


இந்நிலையில், அட்லி - பிரியா தம்பதியருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை இயக்குநர் அட்லி பிரத்யேக மோஷன் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், அவர்கள் சொல்வது சரிதான்.இப்படி ஒரு உணர்வு உலகில் இல்லை.பெற்றோரின் புதிய அற்புதமான சாகசம் இன்று (நேற்று) தொடங்குகிறது. என தெரிவித்துள்ளார். அட்லி - பிரியா தம்பதிக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

From Around the web