உருவகேலி பற்றிய கேள்விக்கு அட்லி கொடுத்த பதிலடி!

 
1

ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. தொடர்ந்து விஜய் நடிப்பில், தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றிப்படங்களை கொடுத்த அட்லி அடுத்து, பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு ஷாருக்கான் நடிப்பில் அவர் இயக்கிய ஜவான் திரைப்படம்கடந்த ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தின் மூலம் அனிருத், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோரை இந்தியில் அறிமுகப்படுத்திய அட்லிக்கு ஜவான் படம் பெரிய வெற்றியை கொடுத்து ரூ1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தை தொடர்ந்து இந்தியில் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியுள்ள அட்லி தனது அடுத்த படத்தையும் இந்தியில் இயக்க தயாராகி வருகிறார். அதேபோல், தயாரிப்பாளராகவும் இந்தியில் களமிறங்கியுள்ள அட்லி, தெறி படத்தின் ரீமேக்காக, பேபி ஜான் படத்தை தயாரித்துள்ளளார்.

வருண் தவான் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரெஷ் நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அட்லி தான் அடுத்து இயக்கும் படம் தொடர்பான வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இதனிடையே, கபில் சர்மா தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் அட்லி சிறப்பு விருந்திராக பங்கேற்றிருந்த நிலையில், அவருக்கு அந்த நிகழ்ச்சியில் உருவ கேலி நடந்துள்ளது. இதை சாதுர்யமாக எதிர்கொண்ட அட்லி, சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில்,இவ்வளவு இளம் வயதில் நீங்கள் ஒரு பெரிய இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறீர்கள். எப்போதாவது நீங்கள் ஒரு பெரிய ஸ்டாரை சந்திக்கச் சென்று அவர் உங்களை நீ தான் அட்லீயா என்று கேட்டிருக்கிறார்களா? என்று கபில் ஷர்மா கேட்கிறார். இதற்கு பதில் அளித்த அட்லி,  நீங்கள் கேட்கும் கேள்வி எனக்கு புரிகிறது. இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸூக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், அவர்தான் என் முதல் படத்தை தயாரித்தார்.

நான் பார்க்க எப்படி இருக்கிறேன். என்னால் இதை செய்ய முடியுமா என்று எல்லாம் அவர் யோசிக்கவில்லை. நான் கதை சொன்ன விதம் அவருக்கு  பிடித்திருந்தது. ஒருவரின் தோற்றத்தை வைத்து அவரை மதிப்பிடக் கூடாது. ஒருவரின் இதயத்தை வைத்துதான் அவரை மதிப்பிட வேண்டும் என்று அட்லி சிறப்பான பதிலடி கொடுத்துள்ளார்.  பாலிவுட் சினிமாவில் ஜவான் என்ற பெரிய வெற்றிப்படத்தை கொடுத்தும், இந்த மாதிரியான கேள்விகளை கேட்பதா என்று, தொகுப்பாளர் கபில் ஷர்மாவை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.


 

From Around the web