தமிழகத்தை உலுக்கிய ஜீவஜோதி விவகாரம்- திரைப்படமாக்க முயற்சி..!

 
ஜீவஜோதி

தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவையே உலக்கிய பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு திரைப்படமாக உருவாகிறது. இந்த விவகாரத்தில் முக்கிய நபராக இருக்கும் ஜீவஜோதி உறுதிப்படுத்தியுள்ளார்.

மறைந்த சரவணபவன் ராஜகோபால் மற்றும் ஜீவஜோதி - பிரின்ஸ் சாந்தகுமார் ஆகியோருக்கு இடையே நடந்த சட்டப் போராட்டம் திரைப்படமாக தயாராகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து ஆதாரங்களையும் ஒருங்கிணைத்து திரைக்கதையாக உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் பவானி ஐயர் என்பவர் மேற்கொண்டு வருகிறார். இதுதொடர்பாக பேசிய வழக்கின் முக்கிய நபராக இருக்கும் ஜீவஜோதி, எனது வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவம் திரைப்படமாக உருவாவதில் மகிழ்ச்சி.

என்னுடைய வாழ்க்கையில் போராட்டமாக கழிந்த அந்த 18 ஆண்டு கால கதையை திரையில் பார்ப்பது ஆணாதிக்கத்தின் நிலைமையில் கடுமையான மாற்றத்தை கொண்டு வரும் என்று கூறினார். படத்தில் நடிப்பதற்கான நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.
 

From Around the web