அட்லீ அழைக்கிறார்...!! நயன்தாரா யோசிக்கிறார்..!!

 
நயன்தாரா

அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஷாரூக்கான் படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்கவைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் அட்லீ இயக்குநராக அறிமுகமான படம் ‘ராஜா ராணி’. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் வெற்றி அடையவதற்கு முக்கிய காரணமாக இருந்தது நயன்தாரா தான். அப்போது முதலே அட்லீக்கு நயன்தாரா அதிர்ஷ்டம் கொண்ட நடிகையாகிவிட்டார்.

இந்த படத்தை தொடர்ந்து ‘பிகில்’ படத்திலும் அட்லீ இயக்கத்தில் நடித்தார் நயன்தாரா. அதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக அட்லீ இயக்கியத்தில் வெளியான ‘மெர்சல்’ படத்தை ஷாரூக்கான் பார்த்துவிட்டு பாராட்டினார். 

அதை தொடர்ந்து நீண்ட நாட்களாகவே ஷாரூக்கான் நடிக்கும் படத்தை அட்லீ இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. தற்போது அது உறுதி செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

முன்னதாக சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுவதற்காக படக்குழு நயன்தாராவை அணுகியது. அதற்கு அவர் நடித்தால் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று கூறி மறுப்பு கூறிவிட்டார். அப்போது ‘எதிர் நீச்சல்’ படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு வாய்ப்பு வந்தவுடன் அதை ஏற்றுக்கொண்டு நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web