ஏறக்குறைய உறுதியான அட்லீ - ஷாரூக்கான் படம்..!

 
ஷாரூக்கான் மற்றும் அட்லீ

அட்லீ அடுத்ததாக இந்தியில் படம் இயக்கவுள்ளது குறித்து எல்லோருக்கும் தெரிந்தது தான். அந்த படத்தில் ஷாரூக்கான் நடிக்கலாம் என்கிற செய்தி கடந்த இரண்டு ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது.

பல்வேறுகட்ட பேச்சுவார்த்தையை அடுத்து அட்லீ படத்தில் ஷாரூக்கான் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் ஆகஸ்டு மாதம் துவங்கி, இந்தாண்டு டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு சென்னையிலுள்ள இயக்குநர் அட்லீ அலுவலகத்திற்கு ஷாரூக்கான் வந்திருந்தார். அப்போது முதல் இவர்கள் இணைந்து பணியாற்றும் படம் பற்றி செய்திகள் கோலிவுட் மற்றும் பாலிவுட் ஊடகங்களில் உலா வருகின்றன.

விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற மெகா ஹிட் படங்களை அடுத்தடுத்து இயக்கியதை போன்று, ஷாரூக்கானை படத்தை அட்லீ இயக்க விரும்புவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

நடிகர் ஷாரூக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கும் ‘பதான்’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு பல மாதங்களாக நடந்து வருகின்றன. அதை தொடர்ந்து அட்லீ இயக்கும் படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 

From Around the web