அட்லீயின் ஷாரூக்கான் படம் இந்த பிரபல வெப் சிரீஸின் காப்பியா..?

 
அட்லீ மற்றும் ஷாரூக்கான்

அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான், நயன்தாரா நடித்து வரும் பாலிவுட் படத்தின் பின்னணி தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் அட்லீ இயக்கிய அனைத்து படங்களும், தமிழில் முன்னரே வெளியான சில படங்களுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்யப்பட்டன. அதாவது பழைய தமிழ் படத்தின் புதிய நவீன வடிவமாக அட்லீயின் படங்கள் ரசிகர்களால் அடையாளப்படுத்தப்படுகின்றன.

அவருடைய ராஜா ராணி படம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘மவுன ராகம்’ படத்தின் தழுவல் என்று தகவல் வெளியானது. அதேபோல, அவருடைய தெறி மற்றும் மெர்சல் படங்கள் சத்ரியன் மற்றும் அபூர்வ சகோதரர்கள் படத்தின் காப்பி என்கிற விமர்சனம் எழுந்தன.

இந்த வரிசையில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம், இந்தியில் ஷாரூக்கான் நடித்த ‘சக்தே இந்தியா’ படத்தின் காப்பி என்றும் கூறப்பட்டது. அதனால் தற்போது ஷாரூக்கானை வைத்து அவர் இயக்கி வரும் இந்திப் படமும் விமர்சனங்களை சந்தித்துள்ளன.

அதன்படி நெட்ஃப்ளிக்ஸ் வலைதளத்தில் வெளியாகி உலகளவில் கவனம் பெற்ற ‘மைனி ஹையிஸ்ட்’ வெப் தொடரை காப்பி அடித்து இப்படம் உருவாவதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி படத்தை எதிர்பார்த்துள்ள ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

From Around the web