நித்யா மேனன் உடன் ஆடி... ஆடி ரோமேன்ஸ் செய்யும் தனுஷ்..!

 
தனுஷ் மற்றும் நித்யா மேனன்

புதியதாக தயாராகி வரும் படத்தில் நடிகை நித்யா மேனன் உடன் நடிகர் தனுஷ் ரோமேன்ஸ் செய்யும் காட்சிகள் இணையதளங்களில் கசிந்துள்ளன.

தமிழில் அதிக படங்களில் நடித்து வரும் ஹீரோவாக உள்ளார் தனுஷ். அதேபோல வேற்று மொழியில் தயாராகும் அதிக படங்களிலும் அவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் அவர் நடித்து வருகிறார்.

திருச்சற்றம்பலம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நித்யா மேனன், ப்ரியா பவானிசங்கர் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றன. இந்த படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அப்போது எடுக்கப்பட்ட பாடல் காட்சி தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் கசிந்துள்ளனர்.

அந்த பாடலில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் இருவரும் ரோமேன்ஸ் செய்கின்றனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது. தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘மாறன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

From Around the web