அவதார் 2 படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!
உலகளவில் பிரமாண்டமான வெற்றி பெற்ற அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
May 19, 2023, 16:05 IST

ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான படம் அவதார். இதனுடைய இரண்டாவது பாகமான அவதார்: தி வே ஆஃப் வாட்டர் 14 ஆண்டுகள் கழித்து வெளியானது. முதல் பாகத்துக்கு இணையாகவே இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
கடந்த 2022, டிசம்பர் 16-ம் தேதி வெளியான இந்த படம் பலநூறு மில்லியன் டாலர் வசூலை வாரி குவித்தது. திரையரங்குகளில் பார்க்க முடியாமல் போனவர்கள் பலரும், இந்த படத்தை ஓ.டி.டியில் பார்க்க காத்திருந்தனர். அதனால் ஓ.டி.டி வெளியீடு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அமெரிக்காவில் கடந்த் மாதமே இந்த படம் ஓ.டி.டியில் வெளியாகிவிட்டது.
எனினும் இந்திய வெளியீடு தாமதமாகி வந்தது. இந்நிலையில் வரும் ஜூன் 7-ம் தேதி முதல் இந்த படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். இது படத்தை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.