ரசிகர்களை ஏமாற்றிய அவதார் சீக்குவல்கள்- காரணம் இதுதான்..!!

கடந்தாண்டு வெளியான அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து, அதனுடைய அடுத்தடுத்த சீக்குவல்கள் வெளியாவதில் சிக்கல் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
avatar 2

டைட்டானிக் படத்தை தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் வெளியான படம் அவதார். உலகளவில் மாபெரும் ஹிட்டடித்த படத்தின் இரண்டாம் பாகம் 13 ஆண்டுகளுக்கு பிறகு கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியானது.

முற்றிலும் 4கே தொழில்நுட்பத்தில் 3டி தொழில்நுட்பத்தில் உருவான இந்த படம் உலகளவில் 160 மொழிகளில் வெளியானது. வெறும் 24 கோடி அமெரிக்க டாலர்களில் உருவான அவதார் 2, திரையரங்குகள் மூலமாக மட்டும் 285 கோடி அமெரிக்க டாலர்களை வசூலித்தது.

ஆடியோ ரைட்ஸ், ஓ.டி.டி. ரிலீஸ் ரைட்ஸ் மற்றும் சேட்டிலைட் ரைட்ஸ் உள்ளிட்டவை தனி கணக்கு. இந்த படத்தின் அடுத்தடுத்த சீக்குவல்கள் குறிப்பிட்ட இடைவெளியில் வெளியாகும் என ஜேம்ஸ் கேம்ரூன் கூறியிருந்தார். மொத்தம் 5 பாகங்கள் கொண்ட படமாக அவதார் சீக்குவல்கள் இருக்கும் என்று கூறப்பட்டது. 

அதில் இரண்டு பாகங்கள் வெளியாகிவிட்ட நிலையில், மீதமுள்ள 3 பாகங்கள் தொடர்ந்து வெளியாகும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி அவதார் 3 2024 டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதனுடைய ரிலீஸ் 2025 டிசம்பர் 19-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அவதார் 4, 2026 டிசம்பர் 18-ம் தேதியில் இருந்து டிசம்பர் 21, 2029-க்கும், அவதார் 5 டிசம்பர் 22, 2028-ல் இருந்து 2031, டிசம்பர் 19-ம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவதார் கதைகள் மட்டுமின்றி அவெஞ்சர்ஸ், பிளேடு, தண்டர்போல்ட்ஸ், கேப்டன் அமெரிக்கா சீக்குவல்களும் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.

From Around the web