ஓ.டி.டி-க்கு வரும் அவதார் 2- இதுதான் தேதி..!!

பிரமாண்டமான வசூலை ஈட்டிய அவதார் இரண்டாம் பாகம் ஓ.டி.டி-யில் வெளியாகும் தேதி உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
 
avatar 2

கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி உலகையே திரும்பி பார்க்க வைத்த படம் அவதார். இதுவரை இந்த படத்தின் வசூலை எந்த படமும் முந்தவில்லை. அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 13 ஆண்டுகள் கழித்து 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது.

அவதார்: தி வே ஆஃப் வாட்டர் என்கிற பெயரில் வெளியான இந்த படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் அசத்தலாக இருந்தது. படம் முழுக்க நீருக்கு அடியில் எடுக்கப்பட்டு இருந்தது, பார்ப்பதற்கு புது அனுபவமாக இருந்தது. எனினும் இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால் படம் வசூலில் புதிய சாதனை படைத்தது. பல மாதங்களாக உலகளவில் இதுதான் வசூலில் நம்பர் ஒன் படமாக இருந்தது. கடந்த 13-ம் தேதி நடந்த 95-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், அவதார் தி வே ஆஃப் வாட்டர் படத்துக்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டன.

திரையரங்குகளில் வெளியாகி கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு அவதார் 2 படம் ஓ.டி.டி-யில் வெளியாகிறது. நேற்று இரவு அமேசான் பிரைம், ஆப்பிள் டி, வூடு உள்ளிட்ட தளங்களில் வெளியானது . இது படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
 

From Around the web