‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருது..!!

நான் ஈ, மகதீரா, பாகுபலி ஆகிய படங்களை இயக்கிய ராஜமௌலியின் அடுத்த படைப்பான ‘ஆர்ஆர்ஆர்’ படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகியது. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய அல்லூரி சீதாராம ராஜூ மற்றும் கொமாராம் பீம் ஆகியோரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் ராஜூவாக ராம் சரணும், பீமாக ஜூனியர் என்.டி.ஆரும் நடித்தனர்.
இவர்களுடன் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பிரபல இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்த இந்த படம் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று 1,200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த பாடலுக்கான விருதை சமீபத்தில் வென்றது.
பல்வேறு விருதுகளைப் பெற்று வரும் இப்படம் ஆஸ்கர் விருதுக்கும் அனுப்பப்பட்டது. அதன்படி, ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. சிறந்த ஒரிஜனல் பாடல் பிரிவில் இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருதை வென்றார். அப்போது ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
இசையமைப்பாளர் கீரவாணியுடன், பாடலை எழுதிய சந்திரபோஸும் ஆஸ்கர் விருது வென்றார். விருதுவென்ற இசையமைப்பாளர் கீரவாணி பேசும்போது, ராஜமௌலிக்கு பாட்டு பாடியபடியே நன்றி தெரிவித்தார். மேலும் ஆர்ஆர்ஆர் இந்தியாவின் பெருமை என்றும் குறிப்பிட்டார்.
Great news!🕺 '𝐍𝐚𝐚𝐭𝐮 𝐍𝐚𝐚𝐭𝐮'🕺has made history by sweeping the Oscars 95 for the Best Orginal Song Category. #NaatuNaatu Becomes The First Song From an 'Indian Film' to Land a Best Song at the Academy Award. ❤️🔥#RRR #SSRajamouli #MMKeravani pic.twitter.com/6wmXA8f5vV… https://t.co/Q0zE0Fdfyq
— Bhargavi (@IamHCB) March 13, 2023
Great news!🕺 '𝐍𝐚𝐚𝐭𝐮 𝐍𝐚𝐚𝐭𝐮'🕺has made history by sweeping the Oscars 95 for the Best Orginal Song Category. #NaatuNaatu Becomes The First Song From an 'Indian Film' to Land a Best Song at the Academy Award. ❤️🔥#RRR #SSRajamouli #MMKeravani pic.twitter.com/6wmXA8f5vV… https://t.co/Q0zE0Fdfyq
— Bhargavi (@IamHCB) March 13, 2023
முன்னதாக, ஆஸ்கர் விருது விழாவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறப்பு பாடலாக இடம்பெற்றது. ஆஸ்கர் விருது மேடையில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு அமெரிக்க நடனக் கலைஞரான நடிகை லாரன் காட்லீப் (Lauren Gottlie) உற்சாகமாக நடனமாடினார். நடனத்தின்போது அரங்கமும் உற்சாகமடைந்தது. அரங்கத்தில் இருந்தவர்கள் கூச்சலிட்டபடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆஸ்கர் விருது விழாவில், ‘நாட்டு நாட்டு’ பாடல் நேரடியாகப் பாடப்பட்டது. இந்தப் பாடலை பாடிய ராகுல் சிப்லிகுஞ்-சும் காலபைரவாவும் ஆஸ்கர் மேடையில் பாடினர். முன்னதாக, நடிகை தீபிகா படுகோன் ‘நாட்டு நாட்டு’ பாடல் குறித்த அறிமுகத்தை ஆஸ்கர் மேடையில் எடுத்துரைத்தார். பாடல் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர்.