தமிழில் அடுத்தடுத்து 2 படங்களில் ஒப்பந்தமாகியுள்ள அயோத்தி பட நடிகை..! 

 
1

தமிழில் வெளியான அயோத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார் ப்ரீத்தி அஸ்ராணி.இவர் சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்ற நாடகத்தில் நடித்து பிரபலமானவர்.சிறு வயது முதலே நடிக்கத் தொடங்கிய ப்ரீத்தி அஸ்ராணி, தெலுங்கு மொழிகளில் குறும்படங்களிலும் வெள்ளித்திரைப் படங்களிலும் நடித்து வந்தார்.

இந்த நிலையில், தற்போது தமிழ் சினிமாவில் இரண்டு நடிகர்களுடன் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் ப்ரீத்தி அஸ்ராணி. அந்தப் படத்தின் படப்பிடிப்பு 90% நிறைவடைந்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி நடிகர் கவின் உடன் ஒரு படத்தில் நடிப்பதற்கு கம்மிட் ஆகியுள்ள ப்ரீத்தி அஸ்ராணி. இதையடுத்து, விஜய் டிவியில் பிரபலமாகி தற்போது ஹீரோவாக நடித்து வரும் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகும் மற்றொரு திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

From Around the web