நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றது அய்யனார் துணை..வெளியான TRP ரேட்டிங்..!

 
1

இந்த வாரம் trp ரேட்டிங் லிஸ்டில் எந்தெந்த சீரியல்கள் எந்தெந்தெ இடங்களை பிடித்துள்ளது என்பதை பார்க்கலாம்

வழக்கம் போல இந்த வாரமும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கபெண்ணே சீரியல் தான் முதல் இடத்தில் உள்ளது. இந்த வாரம் சிங்கபென்ன சீரியல் 9 .28 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் மூன்று முடிச்சு சீரியல் இருக்கின்றது. இந்த சீரியல் இந்த வாரம் 9 05 புள்ளிகளை பெற்றுள்ளது. முதல் இரண்டு இடங்களுக்கு மூன்று முடிச்சு மற்றும் சிங்கபெண்ணே சீரியல் மத்தியில் கடுமையான போட்டி நிலவியது.

ஒரு சிறிய வித்யாசத்தில் சிங்கபெண்ணே சீரியல் முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது இடத்திலும் சன் டிவியின் சீரியல் தான் இருக்கின்றது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் இந்த வாரம் 8 .51 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடங்களை சன் டிவி சீரியல்கள் பிடித்திருக்க நான்காவது இடத்தில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் உள்ளது.

இந்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியல் 7 .93 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஐந்தாவது இடத்தில் மேலும் ஒரு சன் டிவி சீரியல் தான் இருக்கின்றது. சன் டிவியின் மருமகள் சீரியல் 7 .91 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆறாவது இடத்தில் எதிர் நீச்சல் 2 சீரியல் இருக்கின்றது. இந்த வாரம் எதிர் நீச்சல் 2 சீரியல் 7 .20 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்க ஏழாவது இடத்தில் அன்னம் சீரியல் உள்ளது.

இந்த சீரியல் இந்த வாரம் 7 .04 புள்ளிகளை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து எட்டாவது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புது தொடரான அய்யனார் துணை உள்ளது. இந்த சீரியல் துவங்கி சில வாரங்களே ஆன நிலையில் trp யில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகின்றது. இந்த வாரம் அய்யனார் துணை சீரியல் 6 62 புள்ளிகளை பெற்றுள்ளது.

மேலும் ஒன்பதாம் இடத்தில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் பத்தாவது இடத்தில் ஜீ தமிழின் அண்ணா சீரியலும் உள்ளது. 

From Around the web