”மூட்ற்ரா கேட்ட...” பாக்கியலட்சுமி சீரியலின் தெறிக்கவிடும் ப்ரோமோ..!!
தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு பொதுமக்கள் மட்டுமல்ல பல செலிப்ரிட்டிகளும் ரசிகர்களாக உள்ளனர்.
விஜய் டிவியின் பாக்கிலட்சுமிக்கு சீரியலுக்கும், சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலுக்கும் வாரந்தோறும் டி.ஆர்.பி-யில் போட்டி நடப்பது வழக்கமாகும். தற்போது கோபிக் கேட்ட ரூ. 20 லட்சம் பணத்தை கொடுத்து, அவருக்கு சொந்தமான வீட்டை பாக்கியலட்சுமி வாங்க முயற்சி எடுப்பது தான் கதைக்களமாக ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த வாரம் பெரிய திருமண ஆர்டரை வெற்றிகரமாக செய்து முடித்து பாக்கியாவுக்கு ரூ. 10 லட்சம் வரை லாபம் கிடைத்துள்ளது. ஏற்கனவே கோபிக்கு ரூ. 2 லட்சம் கொடுக்கபப்ட்ட நிலையில், மீதி ரூ. 18 லட்சம் பாக்கியா கொடுக்க வேண்டியுள்ளது. கல்யாண ஆர்டர் மூலம் கிடைத்த ரூ. 10 லட்சம் போக, ரூ. 8 லட்சத்துக்காக பாக்கியா போராடி வருகிறார்.
இந்த வார ப்ரோமோவில் யாரும் எதிர்பார்க்காத ஒன்றை பாக்கியலட்சுமி செய்து முடித்துள்ளார். கோபிக்கு தர வேண்டிய ரூ. 18 லட்சம் பணத்தை வெற்றிகரமாக பாக்கியலட்சுமி தந்துவிட்டார். இதையடுத்து கோபியை வெளியே அழைத்துக் கொண்டு ராதிகா போய்விட்டார். அவர்கள் வெளியேறும் போது, பாக்கியாவின் பரபரக்கும் பஞ்ச் வசனம் பேசுகிறார். அந்த ப்ரோமோ வீடியோவை நீங்களே பாருங்கள்.