விரைவில் பாக்கியலட்சுமிக்கு “சுபம்”- வெளியான போட்டோ..!!
 

தமிழக தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே வரவேற்புப் பெற்ற பாக்கியலட்சுமி தொடர் விரைவில் முடிவடையவுள்ளதாக சமூகவலைதளத்தில் ஒரு போட்டோ வைரலாகி வருகிறது.
 
bakkiyalakshmi

பெங்காலியில் மிகப்பெரிய ஹிட்டடித்த ஸ்ரீமோயி என்கிற சீரியலில் தமிழ் வடிவம் தான் ‘பாக்கியலட்சுமி’. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் சுசித்திரா, சதீஷ், ரேஷ்மா பசும்பலேட்டி, வி.ஜே. விஷால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

இந்த கதாபாத்திரங்களில் நடித்து வரும் பலருக்கும் பெரும் ரசிகர் வட்டமே உண்டு. அண்மையில் இந்த சீரியலின் எபிசோடுகள் சிறப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்கிற கேள்வியுடன் தொடரின் ஒளிபரப்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் தான் சமூக வலைதளங்களில் பாக்கியலட்சுமி தொடர் குறித்து ஒரு புகைப்படம் வலம் வருகிறது. அது என்னவென்றால் பாக்யா மற்றும் கோபி ஒன்றாக நிற்க சுபம் போடப்பட்ட ஒரு போட்டோ வலம் வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் ஏன் முடிக்கிறீர்கள் என கேட்டாலும் ஒருசில ரசிகர்கள் நல்ல முடிவு என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஆனால் இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கிடையாது. ரசிகரின் பான் மேடு போஸ்டராகும். எனினும் நிஜமாகவே இந்த தொடர் முடியப்போகிறதோ என்பது குறித்து இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. 
 

From Around the web