பாபா படத்தால் என் வாழ்க்கையே தொலைந்தது : மனிஷா ஓபன்..!!

ரஜினிகாந்துடன் பாபா படத்தில் நடித்ததால் தான் எனது திரைவாழ்க்கையே காணாமல் போனது என்று மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.
 
manisha

இந்தி சினிமாவில் 90-களின் மத்தியில் கொடிகட்டி பறந்த நடிகை மனிஷா கொய்ராலா. இவர் தமிழில் 1995-ம் ஆண்டு வெளியான ’பம்பாய்’ படம் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து தமிழ் மற்றும் இந்திப் படங்களில் ஒருங்கே நடிக்க தொடங்கினார். 

பம்பாய் படத்தில் நடித்ததற்காக அவருக்கு 1995-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் நடிகைக்கான ஃப்லிம்பேர் விருதை வென்றார். அதை தொடர்ந்து இந்தியன், முதல்வன், ஆளவந்தான் போன்ற மெஹா ஹிட் படங்களில் நடித்தார். அவர் நடித்தாலே படம் ஹிட் என்கிற நிலை உருவானது.

கடந்த 2002-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘பாபா’ படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் மறுத்துவிடவே, அந்த வாய்ப்பு மனிஷாவுக்கு சென்றது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பாபா படம் படுதோல்வி அடைந்தது. ரஜினி ரசிகர்களுக்கே அந்த படம் பிடிக்கவில்லை.


தற்போது இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் கழித்து, பாபா படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார் மனிஷா. இதுதொடர்பாக இணைய ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருந்தேன். பாபா படம் வெளியாகி படுதோல்வி கண்டது. அதனால் தமிழில் இருந்து எனக்கு வாய்ப்பு வரவில்லை. பாபா படத்தால் எனது தென்னிந்திய சினிமா வாழ்க்கையே தொலைந்துபோனது என்று கூறியுள்ளார்.

எனினும் அவருக்கு பாலிவுட் படங்களில் இருந்தும் பெரியளவில் வாய்ப்பு வரவில்லை. அதனால் துணைநிலை கதாபாத்திரங்களில் தற்போது நடித்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு 99 சாங்க்ஸ், இந்தியா ஸ்வீட்ஸ் போன்ற படங்களில் நடித்தார். நடப்பாண்டில் ஷெக்சாதா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

விரைவில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகவுள்ள ’ஹீராமந்தி; வெப் சிரீஸில் நடிக்கவுள்ளார். இந்த வலை தொடரில் அவருடன் சோனாக்‌ஷி சின்ஹா, அதிதி ராவ் ஹைத்ரி, ரிச்சா சத்தா, ஷர்மின் செஹல் மற்றும் சஞ்சீதா ஷெயிக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
விரைவில் இதற்கான படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது.

From Around the web