இரண்டாவது மனைவியை 7 மாதத்தில் பிரிந்த பப்லூ பிரித்விராஜ்…!

 
1

பாலச்சந்தர் இயக்கிய வானமே எல்லை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரித்திவிராஜ். அஜித் குமார் நடிப்பில் வெளியான அவள் வருவாளா திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1979 ஆம் ஆண்டு வெளியான நான் வாழவைப்பேன் என்ற திரைப்படத்தில் பப்லு என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அன்றிலிருந்து இவர் பப்லு பிரித்திவிராஜ் என்று அழைக்கப்படுகிறார்.மர்மதேசம், அரசி, வாணி ராணி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் தொடர்ந்து நடித்து வந்தவர் இவர். 

இதனை அடுத்து நடிகர் பப்லு ப்ரித்விராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 23 வயதான ஷீத்தல் என்ற இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கிசுகிசுக்கள் எழுந்தது. இந்நிலையில் தற்போது ஷீத்தல் பப்லுவை பிரிந்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது.அதை உறுதி செய்யும் வகையில் அவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஜோடியாக இருந்த போட்டோக்களை நீக்கிவிட்டனர். ‘பிரிந்துவிட்டீர்களா’ என நெட்டிசன் ஒருவர் போட்ட கமெண்டை ஷீத்தல் லைக் செய்திருக்கிறார். அதனால் அவர்கள் பிரிந்தது உறுதி ஆகி இருக்கிறது.

மேலும் பப்லு தனியாக பிறந்தநாள் கொண்டாடி இருக்கும் வீடியோவும் அவர்கள் பிரிவை உறுதி செய்வதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

From Around the web