பேபி அஞ்சு ஓப்பன் டாக்..! 17 வயதில் 48 வயது நடிகருடன் திருமணம்..!

 
1

பேபி அஞ்சு தனது கசப்பான திருமணம் வாழ்க்கையை குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 17 வயதில் அப்பாவை மீறி காதலித்து குடும்பத்தை எதிர்த்து அவரை திருமணம் செய்து கொண்டேன். பிறகு தான் அவருக்கு ஏற்கனவே 3 முறை திருமணங்கள் நடந்ததும், என்னை விட வயதில் மூத்த பிள்ளைகள் அவருக்கு உள்ளதாக தெரிந்தது.மிகவும் வருத்தப்பட்டேன். நான் கர்ப்பமாக இருந்த நேரத்திலேயே அவர் இன்னொரு பெண்ணுடன் பழக துவங்கினார். இதன் காரணமாக, அவரை பிரிந்து விவாகரத்து பெற்றேன். என் குழந்தைக்கு 2 வயதான போது கணவர் இறந்துவிட்டதாக செய்தி கிடைத்தது. அப்பொழுது அவரை சென்று பார்க்கலாம் என்று எனது அம்மா எவ்வளவோ அழைத்த பொழுதும் நான் செல்லவில்லை.

ஏனெனில் கடைசியாக அவரை விட்டு பிரியும் பொழுது நீ செத்தாலும் சரி நான் செத்தாலும் சரி இந்த வீட்டு வாசலை மிதிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டுதான் வந்திருந்தேன். அதனால் அவர் இறந்தபோது அவரது முகத்தை கூட நான் பார்க்கவில்லை எனது மகன் அவருடைய தந்தையை பார்த்ததே கிடையாது.

திரைப்படங்களில் அவர் வரும் பொழுது அதை காட்டி உன் அப்பா இவர்தான் என்று காட்டி இருக்கிறேன். அதன் பிறகு வீராப்பு, பொல்லாதவன் போன்ற திரைப்படங்களில் நடித்தேன். அதன் பிறகு மீண்டும் எனது அம்மா இறந்துவிட்ட காரணத்தினால் நான் சினிமாவை விட்டு விலகி ஆஸ்திரேலியாவில் இருந்த எனது அண்ணன் வீட்டில் தங்கி இருந்தேன்.

தற்சமயம் மீண்டும் நடிக்க துவங்கியிருக்கிறேன் மீண்டும் என்னை திரையில் நீங்கள் பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார் அஞ்சு.

From Around the web