தவறான ஊசியால் தவமிருந்து பெத்த குழந்தை இறந்துருச்சு... அனிதா குப்புசாமி எமோஷனல்..!

 
1

நாட்டுப்புற பாடகர் ஆகவும் பின்னணி பாடகர்கள் ஆகவும் வலம் வருபவர்கள் தான் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா தம்பதி. இவர்கள் இருவரும் நாட்டுப்புற இசையின் மூலமாக அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கின்றனர்.

சென்னை பல்கலைக்கழகத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து படிக்கும் போது பல்வேறு போட்டிகளிலும் கச்சேரிகளிலும் ஒன்றாக பாடி இருக்கிறார்கள். அப்போதுதான் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாம். பிறகு வீட்டின் எதிர்ப்பையும் மீறி இவர்கள் திருமணம் செய்து இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு பண ரீதியாக அதிகமான கஷ்டப்பட்டு இருந்தாலும் தங்களுடைய காதல் குறைந்ததில்லை என்று அனிதா குப்புசாமி பல இடங்களில் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அனிதா குப்புசாமி யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதில் மாடித்தோட்டம், பூஜை அறை, சமையல் குறிப்பு போன்ற பலவற்றையும் வீடியோவாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய வாழ்க்கையில் தன்னால் மறக்க முடியாத சில நினைவுகள் குறித்தும் பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் எனக்கு பல்லவி, மேகா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

ஆனால் பல்லவி பிறந்த பிறகு எனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்த நேரம்தான் நான் கர்ப்பமானேன். பிறகு நான் நினைத்த மாதிரியே எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது அந்த குழந்தையின் முகம் அவ்வளவு வசீகரமாக இருந்தது. ஆனால் குழந்தை பிறந்த 24 மணி நேரத்தில் நான் மயக்கமாக இருந்த போது டாக்டர்கள் ஏதோ தவறான ஒரு ஊசியை போட்டு விட்டார்கள்.

அதனால் நன்றாக இருந்த குழந்தை நெஞ்செல்லாம் எரிந்து இறந்து போய்விட்டது என்று அந்த பேட்டியில் கண் கலங்கி அழுதவாறு பேசியிருக்கிறார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.


 

From Around the web